முதல் நாள் கலந்தாய்வு
*இன்று 22.05.2017 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கரூர் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வினை பார்வையிட வருகைபுரிந்த நமது மதிப்புமிகு முதன்மைக்கல்வி அலுவலர்திரு. அய்யண்ணன் அவர்களை சந்தித்து நமது பல்வேறு விதமான கோரிக்கைகள், பணிநிரவல் கலந்தாய்வு தொடர்பான கருத்துக்களை மாவட்டச் செயலாளர் சு.அமுதன் தலைமையில் வலியுறுத்தி பேசினோம். அவர் பல்வேறு கோரிக்கைகளையும் இன்முகத்தோடு கேட்டு நம் முன்பே மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் தொடர்பு கொண்டு கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கூறினார். கோரிக்கைகள் பின்வருமாறு
1.கரூர் மாவட்டம், க.பரமத்தி வட்டாரம் அரங்கபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட 6 நடுநிலைப்பள்ளிகளில் ஒரே ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மட்டுமே உள்ளது. அப்பள்ளிகளின் மாணவர்கள் நலன் கருதி அரசாணை 100-ன் படி கூடுதலாக ஒரு பட்டதாரி பணியிடம் வழங்க வேண்டும்.
பதில்.: இது சம்பந்தமாக DEEO அலுவலகம்
2. 24.05.2017-அன்று நடைபெறும் இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வில் 31.08.2016-ன் மாணவர்கள் எண்ணிக்கையின் படி *பணிநிரவல்* செய்யப்படுவதாக அறிந்தோம். எனவே ஏப்ரல், மே மாதங்களில் எங்கள் ஆசிரியர்கள் சேர்க்கை பேரணி, அரசு பள்ளி விழிப்புணர்வு நாடகம் போன்றவற்றை நடத்தி மாணவர்கள் எண்ணிக்கையினை கணிசமான எண்ணிக்கையில் உயர்த்தியுள்ளனர். எனவே இன்றைய 20.05.2017-ன் மாணவர்கள் எண்ணிக்கையின்படி பள்ளிக்கு கூடுதல் தேவையாக உள்ள பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர் பணியிடமும், அன்றைய தினத்தை இன்றைய தினத்துடன் ஒப்பிட்டு மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருந்தால்
அப்பள்ளிகளுக்கு பணிநிரவலில் இருந்த ஆசிரியர்களுக்கு விலக்களிக்க வேண்டும். பள்ளியின் மாணவர்கள் சேர்க்கை காலம் என்பது 31.07.2017வரை பணிநிரவலை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் குறித்து இன்முகத்துடன் நம்மிடம்பேசிய முதன்மைக் கல்வி அலுவலருக்கு நன்றி
இவண்.
சு.அமுதன்,
மாவட்டச் செயலாளர்,
கரூர் மாவட்டம்.
Comments
Post a Comment