மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் - சந்திப்பு.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களை TESTF மாவட்டச் செயலாளர் அமுதன் சந்திப்பு
கரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதிப்புமிகு.சாமிநாதன் அவர்களை மாவட்டச் செயலாளர் சு.அமுதன் பல்வேறு வட்டார ஆசிரியர்கள் பிரச்சினை குறித்தும் உ.தொ.க.அலுவலர்களின் செயல்பாடுகள் சிறப்பானவர்களுக்கு பாராட்டும் ஒரு சில Aeeo'es நடுநிலை குறித்தும் அதிருப்தி தெரிவித்து தொடக்கக் கல்வித் துறை மிகச் சிறப்பாக கரூரில் இயங்க முழு ஒத்துழைப்பு TESTF வழங்கும் என்ற உறுதி அளித்தனர். உடன் மாவட்ட துணைப் பொறுப்பாளர் மதிப்புமிகு.பூபதி அவர்கள் உடனிருந்தார்... கீழ்கண்ட கோரிக்கைகள் குறித்து பேசினர் .
1.தாந்தோனியின் Aeeo திருமதி.ரமணி அவர்கள் ஆசிரியர் விரோதபோக்கு, ஆசிரியர்களை ஒருமையில் பேசுதல், பொறுப்பாளர்கள் தன்னை மிரட்டுகிறீர் என புகார் கொடுப்பேன் என பொறுப்பாளர்களை மிரட்டும் நடவடிக்கையை கைவிட திரு.Deeo அவர்களை சந்தித்து வலியுறுத்தினேன்.
2. அனைத்து ஒன்றியங்களிலும் TDS பணியை முடித்து Form-6 வழங்க. உ.தொ.கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்துதல்.
3. ஆசிரியர்கள் பணப்பலன்களை விரைந்து வழங்க உ.தொ.கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தக் கூறுதல்.
4.முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்விற்காக விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு மாவட்ட முழுவதும் *தேர்வு எழுத அனுமதியினை விரைந்து வழங்க* வலியுறுத்தி கேட்டல் மேலும் சில கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது. ஆணைகள் உடனடியாக வழங்க வேண்டி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்தித்த போது TRB தேர்வு அனுமதி நாளை உங்கள் ஆசிரியர்கள் கைகளில் என்று உறுதி அளித்தார்...
இவண்
சு.அமுதன்,
மாவட்டச் செயலாளர்,
கரூர் மாவட்டம்.
Comments
Post a Comment