அன்பார்ந்த வட்டாரச் செயலாளர்கள் கனிவான கவனத்திற்கு
பணிவான வணக்கங்கள்
இன்று மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களை விலையில்லாப் பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விதம் கூடுதலாக தேவைப்படும் ஒன்றியங்களின் தேவை விபரங்கள் தொடர்பாக மாலை 05.15 மணிக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திக்க இருக்கிறோம். எனவே வட்டாரப் பொறுப்பாளர்கள் தங்கள் ஒன்றிய நிலையை எழுத்துப் பூர்வமாக அனுப்பும்படி அன்புடன் கேட்டுக் கொண்டு மாலை சந்திக்க வர விரும்பும் வட்டாரப் பொறுப்பாளர்கள் 05.10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு வரும்படி அன்புடன் வேண்டுகிறேன். மேலும் வட்டாரம் தொடர்பான கோரிக்கைகள் இருப்பின் அதனை முன்கூட்டியே தெரிவித்து அது தொடர்பான கடிதத்தை நேரில் வரும்போது கொண்டு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்.
சு.அமுதன்,
மாவட்டச் செயலாளர்,
கரூர் மாவட்டம்.
Comments
Post a Comment