அன்பார்ந்த மாநிலத் தலைமை மற்றும் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கவனத்திற்கு 
பணிவான வணக்கங்கள்... தற்போது நமது கல்வித்துறை அமைச்சர் பல்வேறு வகையான மாற்றங்களை கல்வித்துறையில் ஏற்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்... 4 -அம்ச கோரிக்கைக்காக 10.11.2016-ல் வட்டார அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாரான போது தமிழகத்தின் அசாதாரணமான சூழ்நிலை மேலும், Aiptf போராட்டமும் நம் போராட்டத்தை மாற்றியது. தற்போது சரியான சூழ்நிலை *விரைந்து போராட்டம்* மாவட்ட,  மாநில அமைப்பு வரை கொண்டு சென்று நம்மை நம்பியுள்ள கடைநிலை இடைநிலை ஆசிரியனுக்கு பெற்று வழங்க வேண்டும் அதற்கான முன்னேற்பாடாக அமைய வேண்டும்.
மேலும் தற்போது பரவலான ஒரு செய்தி நடுநிலைப் பள்ளி என அனைத்துமே உயர்நிலைப் பள்ளி  கணக்கிற்கு கொண்டு சென்று தொடக்கக் கல்வி 1 to 5
பள்ளிக் கல்வி 6 to 12 எனப் பிரிக்கப்பட வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. அப்படியெனில் நமது TESTF பொறுப்பாளர்கள் ஆகவும், உறுப்பினராகவும் உள்ளவர்கள் பள்ளிக்கல்விக்கு சென்றால் நம் உறுப்பினர் எண்ணிக்கை குறையும்... எனது கரூர் மாவட்ட ஆலோசனையாக இரு கல்வித் துறையிலும் விருப்பமுள்ள  இடைநிலை ஆசிரியர்கள்,  பட்டதாரி ஆசிரியர்கள்,  முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என அனைவரையும் அவர்கள் விரும்பினால் TESTF -ல் உறுப்பினர் ஆக்கலாம். அப்படி சேர்த்தால் நம் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.  அவர்கள் அனைவரும் நம் இயக்கத்தை நம்பி இருக்கின்ற, இருந்த காரணத்தாலே உணர்வுடன் உரிமையுடன் பண்புடன் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். கனிவுடன் பரிசீலனை செய்ய அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில அமைப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.
கரூர்.சு.அமுதன்

Comments

Popular posts from this blog

TC REQUESTING LETTER