பொறுப்பாளர்கள் சந்திப்பு

✍️இன்று  
08. 12. 2020
வட்டார கல்வி அலுவலகத்திற்கு நமது  இயக்க 
 வட்டார கிளை தலைவர் , செயலாளர், பொருளாளர் 
சென்று வந்தோம்.

நமது இயக்கத்தை சேர்ந்த
28ஆசிரியர்கள் தங்களது விண்ணப்ப நிலை 
அறிந்திடும் பொருட்டு விபரங்களை அனுப்பி இருந்தனர்.

இதில்

உண்மைத் தன்மை சார்ந்து 12 ஆசிரியர்களும்,

சேமநல நிதி சார்ந்து
3 ஆசிரியர்களும்,

உயர்கல்வி முன் அனுமதி சார்ந்து 3 ஆசிரியர்களும்

விழா முன் பணம் சார்ந்து 2 ஆசிரியர்களும்

பணிவரன்முறை சார்ந்து 2 ஆசிரியர்களும்

தேர்வு நிலை சார்ந்து 3 ஆசிரியர்களும்

தகுதிகாண் பருவ ஆணை வேண்டி 1 ஆசிரியரும்

ஓய்வூதியம் பெறும் 2 ஆசிரியர்கள் சார்ந்த கோரிக்கையும் அடங்கும்.

அலுவலகத்தில் விண்ணப்ப நிலை...

10 வகுப்பு
 12 ஆம் வகுப்பு 
ஆசிரியர் பட்டயப் படிப்பு உண்மைத்தன்மை வேண்டியோர்க்கு பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இவற்றில் விடுபட்டு உள்ளோர்க்கு மீளவும் விண்ணப்பிக்கலாம். உயர்கல்வி உண்மைத்தன்மைக்கு  விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று உயர்கல்வி சான்று வரப் பெற்றுள்ளது.
பணிப்பதிவேட்டில் பதிவு செய்து வழங்கப்படும். உயர் கல்வி உண்மைத்தன்மைக்கு விண்ணப்பிப்போர் உயர்கல்வி பயில அளித்த முன் அனுமதி ஆணை நகல் இணைத்து வழங்கிடுங்கள்.

சேம நல நிதி பெற்றோர் ஒப்புகை & கையொப்பம் இடாதோர் இடவேண்டும்.. ஆணை நகல் இம்மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.

உயர் கல்வி முன் அனுமதிக்கு விண்ணப்பித்தோர் விண்ணப்பம் உரிய ஆணை வேண்டி தொடர் மேல் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதால் விரைவில் கிடைக்க எதிர் நோக்கப்படுகிறது.

தீபாவளி விழா முன்பணம் பெற்றவர்கள் உரிய செல்லுநமூனா Aquittance நமது அலுவலகத்தில் சமர்ப்பிக்க
 கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 பொங்கல் விழா 
முன் பணம் வேண்டுவோர் விரைவில் விண்ணப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விழா முன் பண விண்ணப்ப மாதிரி கீழ் உள்ளவாறு விண்ணப்பித்திடுங்கள்.

பணிவரன்முறை சார்ந்து விண்ணப்பித்தோர் உரிய சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பணிவரன்முறை ஆணை பெறாதோர் மீளவும் நியமன அலுவலர்க்கு பணிவரன்முறை செய்திட விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு நிலை ஆணை வேண்டி விண்ணப்பித்தோர் உரிய ஆணைகள் & சான்றுகள் இணைக்கப்பட  வேண்டும்.

தகுதிகாண் பருவ 
ஆணை வேண்டி விண்ணப்பித்தோர் இம்மாதத்தில் ஆணை பெற்றுக் கொள்ளலாம்.

ஓய்வூதியம் பெறும் நமது இயக்க ஆசிரியர் 10% பணப்பலன் பெற விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். & ஓய்வூதிய கணக்கீடு மிகை ஊதியம் கருவூலத்தில் செலுத்திட நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும்...

மேலும்


மாதந்திர ஊதியத்திற்கு செல்லு நமூனா
( Aquittance) அனுப்ப வேண்டும்.

சம்பள பட்டியலில் வருமான வரி பிடித்தம் செய்யும் பொழுது உரிய CESS கணக்கீடு செய்து பிடித்தம் செய்யப்படல் வேண்டும்.

உரிய தேதியில் மாதந்திர அறிக்கை மற்றும் சம்பள பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப நிலை அறிந்திடும் பொருட்டு தகவல் வழங்கிய சம்மந்தபட்ட ஆசிரியர் சகோதர சகோதரிகளுக்கு அவர்களது தனிப்பட்ட எண்ணில் உரிய தகவல் பகிரப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேள்🙏
by

வட்டாரச் செயலாளர்..🙏

Comments

Popular posts from this blog

TC REQUESTING LETTER

*பள்ளிக்கல்வித்துறையின் 37அறிவிப்பை வெளியிட்டார் கல்வி அமைச்சர்*