தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, க.பரமத்தி வட்டாரம் கிளை, கரூர் மாவட்டம். தேர்தல் நடைபெற்ற நிகழ்வு..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*நமது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் (TESTF) - க.பரமத்தி வட்டாரக்கிளையின் தேர்தல் இன்று (31.10.2020) காலை 10.30 மணிக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தாதம்பாளையத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது...*
*க.பரமத்தி வட்டாரக்கிளையின் தேர்தல் நடைபெற்று, பொறுப்பாளர்கள் அனைவரும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இத்தேர்தலில் ஆணையராக, கரூர் மாவட்டச் செயலாளர் திரு ரா.மணிகண்டன் அவர்களும், துணை ஆணையராக மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு வே.கண்ணன் அவர்களும் செயல்பட்டனர்...*
*தேர்தல் முடிந்த பிறகு, கரூர் மாவட்டத்தின் மேனாள் மாவட்டச் செயலாளரான அமரர் மதிப்புமிகு திரு ஆ.பாடலீஸ்வரன் அவர்களின் 6வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு இன்று நினைவஞ்சலி - சிறப்பாக அனைத்து வட்டாரப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் செலுத்தப்பட்டது..*
*மேலும், க.பரமத்தி வட்டார உறுப்பினர்கள் திரு சு.வாசுதேவன் த.ஆ. கார்வழி மற்றும் திரு கோ.மூர்த்தி த.ஆ, தொட்டியபட்டி, ஆகிய இருவரும் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றதைப் பாராட்டி, "சாதனை ஆசிரியர்" விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது..*
*சிறப்பு பங்கேற்பாளராக மாவட்டத் தலைவர் திரு க.மணிகண்டன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் திரு அ.ஜெயராஜ், கிருஷ்ணராயபுரம் வட்டாரச் செயலாளர் திரு பெ.சந்திரசேகரன் மற்றும் தாந்தோணி வட்டாரச் செயலாளர் திரு வீ. செந்தில், தோகைமலை வட்டாரச் செயலாளர் திரு.சின்னசாமி, அரவக்குறிச்சி வட்டாரச் செயலாளர் திரு க.முனியப்பன் மற்றும் அனைத்து வட்டாரப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்...*
*தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள்...* 👇
*வட்டாரத் தலைவர்- திரு சு.வாசுதேவன்,*
*வட்டாரச் செயலாளர்- திரு வே.சாமிநாதன்,*
*வட்டாரப் பொருளாளர்- திரு மே.கு.குமார்,*
*துணைத் தலைவர்கள்..*
*1.திருமதி ஹேமாவதி*
*2. திரு.அய்யாத்துரை*
*துணைச் செயலாளர்கள்..*
*1. திருமதி ரமாமணி*
*2.திரு மு.இளங்கோவன்* **
*மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள்..*
*1.திரு சி.பொன்னம்பலம்*
*2.பெ.ராஜேந்திரன்*
*3. திரு.ஆறுமுகம்*
*4. செல்வி அ.சிவகாமி*
*வட்டாரச் செயற்குழு உறுப்பினர்கள்..*
*1.திரு ஆ.அலெக்ஸ்சாண்டர்*
*2. திரு இரா.சண்முகசுந்தரம்*
*3. திரு சி.ரவி*
*4.திருமதி கு.சுமதி*
*5.திருமதி வ . மீனாம்பாள்*
*6.திருமதி மதுமதி*
*7. திருமதி ரெஜினா*
*8. திருமதி தமிழரசி*
*9.திருமதி காஞ்சனா*
*10. திருமதி மஞ்சுளா*
*11. திருமதி கார்மேகம்*
*12. திரு பாலகுருநாதன்*
*13. திரு கந்தவேல்முருகன்*
*14. திரு நல்லசிவம்*
*15. திருமதி மகாலட்சுமி*
*16. திருமதி. அமுதா*
*17. திருமதி தவமணி..*
*தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். அனைவருக்கும் கரூர் மாவட்ட மற்றும் அனைத்து வட்டாரக் கிளையின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் க. பரமத்தி வட்டாரத்தின் TESTF உறுப்பினர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது..*
💐💐💐💐💐💐💐💐💐
*-ரா.மணிகண்டன்,*
*தேர்தல் ஆணையர் & மாவட்டச்செயலாளர்,*
*திரு வே.கண்ணன்,*
*துணை ஆணையர் & மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்,*
*கரூர் மாவட்டம்..*
Comments
Post a Comment