பொறுப்பாளர்கள் சந்திப்பு
✍️இன்று 08. 12. 2020 வட்டார கல்வி அலுவலகத்திற்கு நமது இயக்க வட்டார கிளை தலைவர் , செயலாளர், பொருளாளர் சென்று வந்தோம். நமது இயக்கத்தை சேர்ந்த 28ஆசிரியர்கள் தங்களது விண்ணப்ப நிலை அறிந்திடும் பொருட்டு விபரங்களை அனுப்பி இருந்தனர். இதில் உண்மைத் தன்மை சார்ந்து 12 ஆசிரியர்களும், சேமநல நிதி சார்ந்து 3 ஆசிரியர்களும், உயர்கல்வி முன் அனுமதி சார்ந்து 3 ஆசிரியர்களும் விழா முன் பணம் சார்ந்து 2 ஆசிரியர்களும் பணிவரன்முறை சார்ந்து 2 ஆசிரியர்களும் தேர்வு நிலை சார்ந்து 3 ஆசிரியர்களும் தகுதிகாண் பருவ ஆணை வேண்டி 1 ஆசிரியரும் ஓய்வூதியம் பெறும் 2 ஆசிரியர்கள் சார்ந்த கோரிக்கையும் அடங்கும். அலுவலகத்தில் விண்ணப்ப நிலை... 10 வகுப்பு 12 ஆம் வகுப்பு ஆசிரியர் பட்டயப் படிப்பு உண்மைத்தன்மை வேண்டியோர்க்கு பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். இவற்றில் விடுபட்டு உள்ளோர்க்கு மீளவும் விண்ணப்பிக்கலாம். உயர்கல்வி உண்மைத்தன்மைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று உயர்கல்வி சான்று வரப் பெற்றுள்ளது. பணிப்பதிவேட்டில் பதிவு செய்து வழங்கப்படும். உயர் கல்வி உண்மைத்தன்மைக்கு விண்ண