Posts
Showing posts from 2021
கரூர் மாவட்ட கிளை பொறுப்பாளர்கள் தேர்தல்:*தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி* கரூர் மாவட்ட *க.பரமத்தி* வட்டார இயக்க *சகோதர சகோதரிகள்* அனைவருக்கும் வணக்கம்🙏🙏🙏 ✍️ *கரூர் மாவட்ட கிளையின் தேர்தல்* - இன்று (27.12.2020) வெகு சிறப்பாக பசுபதி பாளையம் கரூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.. மாவட்டத் தேர்தலை முன்னிட்டு நம் க.பரமத்தி வட்டாரம் சார்பாக 👇 தலைவர் சு.வாசுதேவன் அவர்கள் செயலாளர் வே.சாமிநாதன்அவர்கள் பொருளாளர் மே.கு.குமார் அவர்கள் மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள் 👇 சி.பொன்னம்பலம் அவர்களும் ப.ஆறுமுகம் அவர்களும், பெ.ராஜேந்திரன் அவர்களும் அ.சிவகாமி அவர்களும் பங்கேற்றோம்.. *மாவட்டத் தலைவராக திரு.சி.பொன்னம்பலம்* அவர்களும் *மாவட்டச் செயலாளராக திரு ரா.மணிகண்டன்* அவர்களும், *மாவட்ட பொருளாளராக திரு ஆ.அமல்ராஜ்* அவர்களும் மற்றும் ஏனைய மாவட்ட பொறுப்பாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.. நம் க.பரமத்தி வட்டாரம் சார்பாக *மாவட்ட தலைவராக திரு சி பொன்னம்பலம்* அவர்களும் (தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நம்பகவுண்டனூர்) *மாவட்ட செயற்குழு உறுப்பினராக திருமதி நா. நவமணி* (தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சின்னப்புளியம்பட்டி) அவர்களும் *கரூர் மாவட்ட மகளிர் வலையமைப்பிற்கு க.பரமத்தி வட்டாரத்தின் சார்பில் பொறுப்பாளர் திருமதி.இரா.சரஸ்வதி* (தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மொ.தொட்டம்பட்டி , க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் )அவர்களும் மாவட்டத் தேர்தலில் குறிப்பிட்ட பதவிகளுக்கு வேட்பு மனு செய்து கலந்து கொண்டு போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்கள். கரூர் மாவட்டக்கிளை தேர்தலை பெரம்பலூர் மாவட்ட மாநில செயற்குழு உறுப்பினர் திரு.இளவழகன் அண்ணன் அவர்கள் தேர்தல் ஆணையாளராக இருந்து சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.. சிறப்பு பார்வையாளர்களாக மாநிலத் துணை செயலாளரும் , பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான அண்ணன் திரு.ஈ.ராஜேந்திரன் அவர்களுடன் மாநிலத் துணைத்தலைவரும் திருச்சி மாவட்ட செயலாளரான அண்ணன் திரு.சே.நீலகண்டன் அவர்கள், திருப்பூர் மாவட்ட செயலாளர் அண்ணன் திரு.ஜெயராஜ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.. மாவட்டத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு *பேரியக்க பொதுச் செயலாளர் மதிப்புமிகு ந.ரெங்கராஜன்* அவர்களின் மகன் திருமணவிழா அழைப்பிதல்களை வட்டார வாரியாக அனைவருக்கும் அளித்து வருகை தந்து சிறப்பிக்க கோரினார்.. பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துரைகளை வழங்கினார்.. திருச்சி மாவட்டக்கிளை சார்பாகவும் பொன்னாடை அணிவித்து வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.. மாவட்ட தேர்தலில் கலந்து கொண்ட அண்டை மாவட்ட , வட்டார பொறுப்பாளர்கள் அனைவருக்கும் கரூர் மாவட்டக் கிளையின் சார்பாக பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் நம் வட்டாரம் சார்பிலும் புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.. மாவட்டத்தேர்தல் ஏற்பாடுகளை மிகச் சரியாக செய்த கரூர் வட்டார/மாவட்ட கிளைக்கு மானமார்ந்த பாராட்டுக்கள் , வாழ்த்துகளை க.பரமத்தி வட்டாரம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.. 💐💐💐💐💐💐💐💐💐💐💐 இவண் *வே.சாமிநாதன்*, செயலாளர், க.பரமத்தி வட்டார கிளை🙏
- Get link
- X
- Other Apps